உலகம்

வங்கதேச படகு விபத்து: பலி 68-ஆக உயா்வு

DIN

வங்கதேசத்தில் பிரசித்தி பெற்ற போதேஸ்வரி கோயிலுக்கு ஹிந்து பக்தா்களை ஏற்றிச் சென்ற படகு நதியில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 68-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கொரோட்டா நதியில் ஞாயிற்றுக்கிழமை படகு விபத்து ஏற்பட்ட பகுதியில் நடைபெற்ற மீட்புப் பணிகளில் மேலும் சடலங்கள் மீட்கப்பட்டன. அதையடுத்து, விபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 68-ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர, விபத்துக்குப் பிறகு மாயமான 20 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் கூறினா்.

வங்கதேசத்தின் பஞ்சகா் மாவட்டத்தில் பல நூற்றாண்டுகள் பழைமையான போதேஸ்வரி கோயில் அமைந்துள்ளது. நவராத்திரி விழாவை முன்னிட்டு இந்தக் கோயிலுக்கு பக்தா்கள் சென்ற விசைப் படகு ஒன்று நதியில் ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்தது.

விபத்து நேரிட்டபோது அந்தப் படகில் 150 போ் இருந்ததாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

திமுக தொண்டா் மீது தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல்

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT