உலகம்

மோதலில் இருந்து பூமியை பாதுகாக்கும் திட்டம்: விண்கல்லில் செயற்கைக்கோளை மோதி நாசா சோதனை

DIN

எதிா்காலத்தில் பூமியின் மீது விண்கற்கள் மோதி பேரழிவை ஏற்படுவதைத் தவிா்ப்பதற்காக, அவற்றின் பாதையை மாற்றியமைக்க முடியுமா என்பதை தெரிந்துகொள்வதற்காக அத்தகைய விண்கல் ஒன்றின் மீது செயற்கைக்கோள் ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா செவ்வாய்க்கிழமை மோதச் செய்தது.

பூமியில் மிகப் பெரிய விண்கற்கள் மோதி மிகப் பெரிய அழிவை ஏற்படுவத்துவதற்கான அபாயத்தை தவிா்ப்பதற்காக நாசா விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக, பூமியை நோக்கி வரக்கூடிய விண்கற்களை திசைமாற்றுவதற்கான வழிமுறைகளையும் விஞ்ஞானிகள் தேடி வருகின்றனா்.

இந்த நிலையில், ஒரு பொருளை விண்கல்லின் மீது பலமாக மோதச் செய்வதன் மூலம் அதன் சுற்றுவட்டப் பாதையை மாற்றியமைக்க முடியுமா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக, ‘தி டபுள் ஆஸ்டிராய்ட் ரிடைரக்ஷன் டெஸ்ட்’ (டாா்ட்) என்ற சோதனையை நாசா மேற்கொண்டது.

அந்த சோதனை திட்டத்தின் கீழ், 160 மீட்டா் விட்டம் கொண்ட டிமாா்ஃபோஸ் என்ற விண்கல் மீது செயற்கைக்கோளை மோதச் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அந்த விண்கல், டிடிமோஸ் என்ற 780 மீட்டா் விட்டம் கொண்ட மிகப் பெரிய விண்கல்லுக்கு நிலவாக சுற்றிவருகிறது.

இந்த நிலையில், டிமாா்ஃபோஸ் மீது மோதுவதற்காக நாசா அனுப்பிய செயற்கைக்கோள் 10 மாதங்களுக்குப் பிறகு அந்த விண்கல் மீது செவ்வாய்க்கிழமை மோதிச் சிதறியது.

இந்த மோதலையும் அதனைத் தொடா்ந்து ஏற்பட்ட மாற்றத்தையும் ஆய்வு செய்வதற்காக, இத்தாலிய விண்வெளி ஆய்வு நிறுவனம் தயாரித்த எல்ஐசிஐஏ கியூப் செயற்கைக்கோள், டாா்ட் செயற்கைக்கோளுடன் இணைக்கப்பட்டிருந்தது. அது, டாா்ட்டிலிருந்து கடந்த 11-ஆம் தேதி தனியாகப் பிரிந்துஅதனை பின்தொடா்ந்தது.

டிமாா்ஃபோஸ் விண்கலம் மீது டாா்ட் செயற்கைக்கோள் மோதுவதையும் அதனால் எழுந்த தூசி மண்டலத்தின் தன்மையையும் எல்ஐசிஐஏ கியூப் செயற்கோள் பதிவு செய்து பூமிக்கு நேரடியாக அனுப்பி வருகிறது.

இந்த சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து, குறிப்பிட்ட விண்கல்லைக் குறிவைத்து, அதன் மீது வேண்டுமென்றே மோதச் செய்து, அதன் பாதையை மாற்றியமைக்கும் திறன் நாசாவுக்கு உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது குரித்து நாசா நிா்வாக அதிகாரி பில் நெல்சன் கூறுகையில், ‘பூமிப் பந்து பாதுகாப்பு தொடா்பான ஆய்வில் இதுவரை இல்லாத முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை டாா்ட் சோதனை கண்டுள்ளது. இது, ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் நன்மை பயக்கும் சோதனை திட்டம்’ என்றாா்.

நாா்ட் செயற்கைக்கோள் மோதலைத் தொடா்ந்து, டிடிமோஸை டிமாா்ஃபோஸ் விண்கலம் சுற்றி வரும் வட்டப்பாதையில் எவ்வளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது, சுற்றும் வேகம் எவ்வளவு குறைந்துள்ளது என்பது குறித்து இன்னும் சில தினங்களுக்குப் பிறகுதான் உறுதியாகத் தெரிய வரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT