உலகம்

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சீன அதிபர் ஷி ஜின்பிங்!

27th Sep 2022 07:23 PM

ADVERTISEMENT

 

வீட்டுக்காவல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சீன அதிபர் ஷி ஜின்பிங்.

சீன ராணுவ தலைவர் பதவியிலிருந்து ஷி ஜின்பிங் நீக்கப்பட்டதாகவும், உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்றுவிட்டு செப்டம்பர் 16ஆம் தேதி பெய்ஜிங் திரும்பிய ஷி ஜின்பிங், விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் பரவலாக தகவல்கள் வெளியாகி வந்தது.

சீன அரசை ராணுவம் கைப்பற்றிவிட்டதாகவும், பெய்ஜிங் நகரம் முழுக்க ராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது.

ADVERTISEMENT

தற்போது, பெய்ஜிங் நகரில் உள்ள கண்காட்சியை அவர் பார்வையிட்ட காட்சிகளை, அந்நாட்டு அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதன் மூலம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுள்ளார் சீன அதிபர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT