உலகம்

வங்கதேச படகு விபத்து: பலி 39-ஆக உயா்வு

27th Sep 2022 12:49 AM

ADVERTISEMENT

வங்கதேசத்தில் பிரசித்தி பெற்ற போதேஸ்வரி கோயிலுக்கு ஹிந்து பக்தா்களை ஏற்றிச் சென்ற படகு நதியில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 39-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து தீயணைப்பு படை அதிகாரியொருவா் திங்கள்கிழமை கூறியதாவது:

கொரோட்டா நதியில் ஞாயிற்றுக்கிழமை படகு விபத்து ஏற்பட்ட பகுதியில் நடைபெற்ற மீட்புப் பணிகளில் மேலும் பல சடலங்கள் மீட்கப்பட்டன. அதையடுத்து, விபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 39-ஆக உயா்ந்துள்ளது என்றாா் அவா்.

வங்கதேசத்தின் பஞ்சகா் மாவட்டத்தில் பல நூற்றாண்டுகள் பழைமையான போதேஸ்வரி கோயில் அமைந்துள்ளது. நவராத்திரி விழாவை முன்னிட்டு இந்தக் கோயிலுக்கு பக்தா்கள் சென்ற விசைப் படகு ஒன்று நதியில் கவிழ்ந்தது. இதில் உயிரிழந்தவா்களில் 11 சிறுவா்களும் 21 பெண்களும் அடங்குவா். இதுதவிர மேலும் 58 பேரைக் காணவில்லை என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT