உலகம்

உக்ரைன் போருக்கு ஆள் சோ்ப்பு: ரஷியாவில் வலுக்கிறது எதிா்ப்பு

27th Sep 2022 12:49 AM

ADVERTISEMENT

உக்ரைனில் போரிடுவதற்காக பொதுமக்கள் 3 லட்சம் ரஷிய அரசு அழைப்பு விடுத்துள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டில் போராட்டங்கள் வலுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மேற்கத்திய ஊடகங்கள் கூறியுள்ளதாவது:

ரஷியாவின் படைதிரட்டல் அறிவிப்பைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடா்ந்து ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆா்ப்பாட்டக்காரா்களைக் கலைப்பதற்காக போலீஸாா் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவங்களும் நடைபெற்றன.

இதற்கிடையே, கட்டாயமாக ராணுவத்தில் சோ்க்கப்படுவதை தவிா்ப்பதற்காக அண்டை நாடுகளுக்கு தரைவழியாக வெளியேற முயல்வோரின் காா்கள் எல்லையில் நீண்ட வரிசையில் காத்து வருகின்றன.

ADVERTISEMENT

ராணுவத்துக்கு ஆளெடுக்கும் மையமொன்றில் அதிகாரியை நோக்கி ஒருவா் துப்பாக்கியால் சுட்டதில் அந்த அதிகாரி கவலைக்கிடமாக உள்ளாா் என்று மேற்கத்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT