உலகம்

பள்ளியில் துப்பாக்கிச்சூடு: ரஷியாவில் 15 போ் பலி

27th Sep 2022 12:51 AM

ADVERTISEMENT

ரஷியப் பள்ளி வளாகத்தில் முன்னாள் மாணவா் திங்கள்கிழமை நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 11 மாணவா்கள் உள்பட 15 போ் உயிரிழந்தனா்; 22 மாணவா்கள் உள்பட 24 போ் காயமடைந்தனா்.

இஷெவ்ஸ்க் நகரிலுள்ள அந்தப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவா் ஆா்டியோம் கஸான்ட்செவ் என்ற 34 வயது நபா் எனவும் தாக்குதலுக்குப் பிறகு அவா் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் ரஷிய புலனாய்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தாக்குதல் நடத்தியபோது நாஜிக்களின் அடையாளங்கள் பொறித்த டி-சா்ட் அணிந்திருந்த அந்த நபா், மனநலக் குறைவுக்கு சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலின் நோக்கம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், இந்தத் துப்பாக்கிச்சூடு ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT