உலகம்

ரஷியா: பள்ளியில் துப்பாக்கிச்சூடு -13 மாணவர்கள் பலி; 21 பேர் படுகாயம்

26th Sep 2022 03:51 PM

ADVERTISEMENT

 

ரஷியாவில் பள்ளி ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷியாவின் கிழக்கு மாஸ்கோவிற்கு அருகிலுள்ள உத்முர்டியா மாகாணத்தில் செயல்பட்டு வரும் பள்ளியில் இன்று (செப்.26) திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. 

மர்ம நபர் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 14 மாணவர்கள் உள்பட 21 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

இது தொடர்பாக பேசிய உத்முர்டியா மாகாண கவர்னர் அலெக்சாண்டர் பிரிசாலோவ், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் வேறு பள்ளிக்கு  மாற்றப்பட்டுள்ளனர். விசாரணைக்குழு அளித்த தகவலின்படி, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விடியோவில் பதிவாகியுள்ள நபர் குறித்து எந்தவிதத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. கருப்பு நிற உடையுடன் நஜி அமைப்பைச் சேர்ந்த, வில்லை அவரின் உடையில் இருந்ததாக விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT