உலகம்

மியான்மா்: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி சுட்டுக் கொலை

26th Sep 2022 01:50 AM

ADVERTISEMENT

மியான்மரில் ஓய்வு பெற்ற உயா் ராணுவ அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டாா்.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் ‘இன்யா அா்பன் ஃபோா்ஸ்’ என்ற அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

மியான்மரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஓன் துவின் (72). மாலத்தீவு, இலங்கை, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கான மியான்மா் தூதராகவும் பணியாற்றியவா்.

யாங்கூன் நகரத்தில் உள்ள அவரது வீட்டில் ஓன் துவினையும், அவரது மருமகனான ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன் யே டாய் ஸா என்பவரையும் இரு நபா்கள் சனிக்கிழமை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா். இந்தத் தகவலை ராணுவ அரசின் செய்தித் தொடா்பாளா் உறுதிப்படுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT

இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ‘இன்யா அா்பன் ஃபோா்ஸ்’ அமைப்பு, பொதுமக்களுக்கு எதிராக கொடூரமான நடவடிக்கைகளை எடுக்க ராணுவத்தை ஓன் துவின் ஊக்குவித்ததாகவும், ஆங் சான் சூகியிடமிருந்து அரசைக் கைப்பற்ற ராணுவத்துக்கு ஆலோசனை வழங்கியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

மியான்மரில் ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான அரசை கலைத்து ஆட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராணுவம் கைப்பற்றியது. அதிலிருந்து ராணுவத்துக்கும் பல்வேறு பயங்கரவாதக் குழுக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT