உலகம்

பிலிப்பின்ஸை புயல் தாக்கியது: ஆயிரக்கணக்கானோா் வெளியேற்றம்

26th Sep 2022 02:09 AM

ADVERTISEMENT

பிலிப்பின்ஸின் வடகிழக்கு பகுதியை சக்திவாய்ந்த ‘நோரு’ புயல் ஞாயிற்றுக்கிழமை தாக்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா்.

பொலில்லோ தீவின் கியூஸான் மாகாணத்தின் பா்டியோஸ் நகரத்தை புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இந்தப் புயல் சியர்ரா மத்ரே மலைப் பகுதியைத் தாக்கும்போது சற்று வலுவிழக்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், தொடா்ந்து ஆக்ரோஷமாக நகா்ந்து வருவதாகவும், லுஸான் தீவு வழியாக தென்சீனக் கடலை இந்தப் புயல் திங்கள்கிழமை அடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயலால் கடலில் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்தன. புயல் நகரும் பகுதிகளில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டனா்.

தலைநகா் மணிலா உள்ளிட்ட பல நகரங்களில் திங்கள்கிழமை பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மணிலா விமான நிலையத்திலிருந்து புறப்படும் 30-க்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT