உலகம்

தீப்தி சர்மா விக்கெட் விடியோவை சாலை விழிப்புணர்வுக்குப் பயன்படுத்திய தில்லி போலீஸ்!

25th Sep 2022 06:29 PM

ADVERTISEMENT

மன்கட் முறையில் இங்கிலாந்து பேட்டர் சார்லி டீனை ரன் அவுட் செய்த தீப்தி சர்மாவின் விக்கெட் விடியோவை தில்லி போக்குவரத்துப் போலீசார் சாலை விழிப்புணர்வுக்குப் பயன்படுத்தியுள்ளனர். 

இந்திய மகளிர் மற்றும் இங்கிலாந்து மகளிருக்கான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மன்கட் எனும் விதிமுறையின்படி இங்கிலாந்து பேட்டர் சார்லி டீனை இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ரன் அவுட் செய்தார். 

இந்த விக்கெட் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது.

இதன் மூலம் 3-0 என தொடரை கைப்பற்றியது குறிப்பிட்டத்தக்கது. இந்த நிலையில் மன்கட் முறையில் இங்கிலாந்து பேட்டர் சார்லி டீனை ரன் அவுட் செய்த தீப்தி சர்மாவின் விக்கெட் விடியோவை தில்லி போக்குவரத்துப் போலீசார் தனது ட்விட்டர் பக்கத்தில் சாலை விழிப்புணர்வுக்குப் பயன்படுத்தியுள்ளனர். 

ADVERTISEMENT

அதில், வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கை ஏன் முக்கியம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT