உலகம்

வங்கதேசம்: ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 20 பேர் பலி

25th Sep 2022 05:38 PM

ADVERTISEMENT

வங்கதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 20 பேர் பலியானார்கள். 

வங்கதேசத்தின் வடக்கு மாவட்டமான பஞ்சகரில் இன்று பிற்பகல் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 20 பேர் பலியானார்கள். மேலும் 30 பேரை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பலியானாவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

இதையும் படிக்க- வரலாறு படைக்க வரலாற்றை மீளுருவாக்க வேண்டும்: தோனி

ஆயிரக்கணக்கான மக்கள் ஆற்றங்கரைகளில் குவிந்ததால் டாக்காவிலிருந்து மேலும் ஒரு நீச்சல் குழுவினர் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் படகு விபத்துக்கள், பாதுகாப்புத் தரமின்மை மற்றும் அதிக சுமை காரணமாக அடிக்கடி நடக்கின்றன. 

ADVERTISEMENT

கடந்த ஆண்டு டிசம்பரில் பயணிகள் படகு ஒன்று சரக்கு கப்பல் மீது மோதி மூழ்கியதில் சுமார் 37 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT