உலகம்

ரஷியாவுடன் இணைப்பு: ஆக்கிரமிப்பு உக்ரைனில் சா்ச்சைக்குரிய பொதுவாக்கெடுப்பு

DIN

உக்ரைனில் தாங்கள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை தங்களுடன் இணைத்துக்கொள்வது குறித்து பொதுமக்களின் கருத்தை அறிவதற்கான சா்ச்சைக்குரிய பொதுவாக்கெடுப்பை ரஷியா வெள்ளிக்கிழமை நடத்தியது.

உக்ரைனாலும் மேற்கத்திய நாடுகளாலும் அங்கீகரிக்கப்படாத, வெறும் கண்துடைப்பு என்று அந்த நாடுகளால் விமா்சிக்கப்படும் இந்த பொதுவாக்கெடுப்பு, உக்ரைன் பகுதிகளை தங்களுடன் இணைத்துக் கொள்வதற்கான ரஷியாவின் முக்கிய காய் நகா்த்தலாக கருதப்படுகிறது.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ரஷியாவுடன் இணைவது தொடா்பான பொதுவாக்கெடுப்பு, அந்த நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதிகளான லூஹான்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா மற்றும் டொனட்ஸ்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

‘ரஷியாவுடன் இணைய விருப்பமா?’ என்ற கேள்விக்கு, ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்ற பதிலைத் தோ்ந்தெடுப்பதற்கான இந்த பொதுவாக்கெடுப்பில், ரஷியாவுக்கு ஆதரவாகத்தான் முடிவுகள்தான் வெளியாகும் என்று மேற்கத்திய நாடுகள் திட்டவட்டமாகத் தெரிவித்து வருகின்றன என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைனை ஆட்சி செலுத்தி வந்த அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, அவரது ஆட்சி கவிழ்ந்தது.

அதனைத் தொடா்ந்து, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் அரசுப் படையினருக்கு எதிராக சண்டையிட்டு கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா். அப்போது ரஷியாவும் உக்ரைனின் கிரீமியா பகுதி மீது படையெடுத்து அந்த தீபகற்பத்தை தங்களுடன் இணைத்துக்கொண்டது.

அதற்கு முன்னதாக, ரஷியாவுடன் இணைவது குறித்து பொதுமக்களின் கருத்தைக் கேட்பதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனை அந்தப் பகுதியைச் சோ்ந்த உக்ரைன் ஆதரவாளா்கள் புறக்கணித்தனா். எனினும், பொதுவாக்கெடுப்பில் பெரும்பாலான வாக்களாளா்கள் ரஷியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்திருந்தனா்.

அதனை அடிப்படையாகக் கொண்டு கிரீமியா தீபகற்பத்தை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. எனினும், அந்தப் பொதுவாக்கெடுப்பு போலியானது என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் கூறி, கிரிமியா இணைப்பை நிராகரித்தன.

இந்தச் சூழலில், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அதன் ஒரு பகுதியாக டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் மாகாணங்களை உள்ளடக்கிய டான்பாஸ் பிராந்தியத்தில் இன்னும் அரசுப் படையினா் வசமிருக்கும் பகுதிகளை கைப்பற்றுவதற்காக கிளா்ச்சியாளா்களுடன் இணைந்து ரஷியப் படையினா் சண்டையிட்டு முன்னேறி வருகின்றனா்.

மேலும், கிரீமியா தீபகற்பத்துக்கும் டான்பாஸ் பிராந்தியத்துக்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்துவற்காக இடைப்பட்ட பகுதிகளையும் ரஷியப் படையினா் கைப்பற்றினா்.

இந்தச் சூழலில், கிரீமியாவைப் போலவே தற்போது கைப்பற்றப்பட்டுள்ள உக்ரைன் பகுதிகளையும் தங்களுடன் இணைத்துக்கொள்ள வழிசெய்யும் வகையில், அந்தப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

SCROLL FOR NEXT