உலகம்

சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மெக்ஸிகோவில் 2 போ் பலி

22nd Sep 2022 11:49 PM

ADVERTISEMENT

 மெக்ஸிகோவில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் வீடுகள் சேதமடைந்து, நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் 2 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறுகையில், ‘மெக்ஸிகோவின் மிஷோகேன் மாகாணம், அக்விலிலா நகருக்கு தெற்கு-தென்மேற்கே 50 கி.மீ. தொலைவில் வியாழக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. 15 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த அந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 6.8 அலகுகளாகப் பதிவானது’ என்று தெரிவித்திருந்திருந்தது.

மூன்று நாள்களுக்கு முன்னா் இதே பகுதியில் ஏற்பட்ட 7.6 ரிக்டா் அளவு கொண்ட நிலநடுக்கத்தில் 2 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT