உலகம்

மெக்சிகோவை உலுக்கிய மற்றொரு நிலநடுக்கம்: ரிக்டரில் 6.8 ஆகப் பதிவு!

22nd Sep 2022 04:38 PM

ADVERTISEMENT

 

மெக்சிகோவில் மற்றொரு கடுமையான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மெக்சிகோவில் மேற்கு மைக்கோகன் மாகாணத்தில் கடந்த திங்கள்கிழமை மதியம் 1 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவானது. 

இந்தநிலநடுக்கம் மைக்கோன் மாகாணம் மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள நகரங்களிலும், தலைநகர் மெக்சிகோவிலும் கடுமையாக உலுக்கியது. இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்ததாக மக்கள் தெரிவித்தனர். 

ADVERTISEMENT

நிலநடுக்கத்தால் எண்ணற்ற கட்டடங்கள் குலுக்கின. மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்தபடி வெளியேறினர். பழமையான கட்டடங்கள் இடிந்ததாகவும் தகவல்கள் வெளியானது. அதேபோன்று அண்டை மாகாணமான கோலிமாவின் மன்சானிலோ நகரில் வணிக வளாகம் ஒன்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். 

படிக்க: ஏடிஎம் இயந்திரத்தோடு கொள்ளையடித்த மர்ம கும்பல்: ரூ.12 லட்சம் பணம் திருட்டு!

ந்நிலையில், நிலநடுக்க பாதிப்பிலிருந்து மீள்வதற்குள் இன்று மற்றொரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது, மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆகப் பதிவானதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கம் அகுய்லில்லா பகுதியிலிருந்து தென்மேற்கே 46 கி.மீ தொலைவில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை. 

ADVERTISEMENT
ADVERTISEMENT