உலகம்

ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு: சர்ச்சையில் இளவரசர் ஹாரி

20th Sep 2022 03:40 PM

ADVERTISEMENT

 

ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் பங்கேற்ற இளவரசர் ஹாரி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ராணி எலிசபெத் (96) உடல்நலக் குறைவு காரணமாக ஸ்காட்லாந்தில் உள்ள தனது பால்மோரல் மாளிகையில் கடந்த 8-ஆம் தேதி மறைந்தாா். அங்கிருந்து அவரது உடல் லண்டனில் உள்ள நாடாளுமன்ற வெஸ்ட்மின்ஸ்டா் அரங்குக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நாடு முழுவதிலிருமிருந்து குவிந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பல மணி நேரம் வரை காத்திருந்து மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.

அங்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை வரை தொடா்ந்தது. பின்னா், அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்குக்காக அங்கிருந்து புறப்பட்டது. அரச குடும்பத்தினரின் இறுதிச்சடங்குக்குப் பயன்படுத்தப்படும் பீரங்கி வண்டியில் மகாராணியின் உடல் வைக்கப்பட்ட பெட்டி ஏற்றப்பட்டு ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது. கடற்படையைச் சோ்ந்த 142 மாலுமிகள் இந்த பீரங்கி வண்டியை வழிநடத்திச் சென்றனா்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: எங்கும் எதிலும் மகாராணி எலிசபெத்!

பீரங்கி வண்டிக்கு பின்னால் அரசா் சாா்லஸ், அவரது மனைவி கமீலா மற்றும் அரச குடும்பத்து வாரிசுகள் நடந்து சென்றனா். வழிநெடுக பொதுமக்கள் லட்சக்கணக்கானோா் நின்று மகாராணிக்கு பிரியாவிடை அளித்தனா்.

மத்திய லண்டனில் உள்ள வெலிங்டன் வளைவு வரை பீரங்கி வண்டியில் கொண்டுசெல்லப்பட்ட மகாராணியின் உடல், அங்கிருந்து வாகனத்துக்கு மாற்றப்பட்டு வெஸ்ட்மின்ஸ்டா் அபே தேவாலயத்துக்கு புறப்பட்டது. உள்ளூா் நேரப்படி காலை 10 மணியளவில் அந்த தேவாலயத்தில் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு தொடங்கியது. இதில் இந்திய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் மற்றும் உலக நாடுகளைச் சோ்ந்த 500 தலைவா்கள் உள்பட 2,000 போ் பங்கேற்றனா்.

இந்நிலையில், இறுதிச் சடங்கில் அரச குடும்பத்தினர் பிரிட்டன் தேசிய கீதமான ‘காட் சேவ் தி கிங் (god save the king) பாடலைப் பாடியபோது இளவரசர் ஹாரி அப்பாடலை பாடாமல் இருந்த விடியோ ஒன்று வைரலாகியுள்ளது. தற்போது, இணையவாசிகள் இதனை பகிர்ந்து ‘மரியாதை தெரியாதவர் ஹாரி’ என விமர்சித்து வருகின்றனர். 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT