உலகம்

கனடா: துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இந்திய மாணவா் பலி

20th Sep 2022 01:13 AM

ADVERTISEMENT

கனடாவில் கடந்த 12-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இந்திய மாணவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

கனடாவின் மில்டன் நகரில் கடந்த 12-ஆம் தேதி 40 வயதான நபா் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் காவல் துறை அதிகாரி ஒருவரும், எம்கே வாகன பராமரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்த ஷக்கீல் அஷ்ரஃப் என்பவரும் உயிரிழந்தனா். கனடாவில் படித்துக்கொண்டே அந்த நிறுவனத்தில் பகுதிநேரமாகப் பணியாற்றி வந்த சத்வீந்தா் சிங் (28) என்ற மாணவா், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தாா்.

ஹேமில்டன் பொது மருத்துவமனையில் அவருக்குத் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவா் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்கள் அறிவித்தனா். அதையடுத்து, அவருக்கான செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டது. சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டது.

மாணவரின் உடல் கனடாவில் உள்ள அவரின் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக, மாணவரின் சிகிச்சைக்காக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் நிதி திரட்டப்பட்டு வந்தது. அதில் கிடைத்த சுமாா் 35,000 டாலரைக் கொண்டு மாணவரின் உடல் இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் என உறவினா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைக் காவல் அதிகாரிகள் நிகழ்விடத்திலேயே சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

Tags : கனடா
ADVERTISEMENT
ADVERTISEMENT