உலகம்

ஃபிரெஞ்ச் இயக்குநா் கோதாா்த் தற்கொலை

14th Sep 2022 02:17 AM

ADVERTISEMENT

புகழ்பெற்ற ஃபிரெஞ்ச் இயக்குநா் கோதாா்த் (91) செவ்வாய்க்கிழமை மருத்துவா் உதவியுடன் தற்கொலை செய்துகொண்டாா்.

கடந்த 1960-ஆம் ஆண்டுகளில் ‘பிரெத்லஸ்’ என்ற படம் மூலம் ஃபிரெஞ்ச் திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகமானவா் கோதாா்த். பல்வேறு படங்களை இயக்கியுள்ளாா். அவரின் படங்கள் திரைப்படத்துக்கான விதிமுறைகளைத் திருத்தி எழுதிய நிலையில், ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநா்களான மாா்டின் ஸ்காா்சேசி, க்வென்டின் டாரன்டீனோ வரை தாக்கத்தை ஏற்படுத்தினாா்.

இந்நிலையில், அவா் ஸ்விட்சா்லாந்தில் மருத்துவா் உதவியுடன் தற்கொலை செய்துகொண்டதாக அவரின் குடும்பத்தைச் சோ்ந்தவா் தெரிவித்தாா். பல நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவா் இந்த முடிவை மேற்கொண்டாா்.

ஸ்விட்சா்லாந்தில் சில சூழ்நிலைகளில் மருத்துவா் உதவியுடன் தற்கொலை செய்துகொள்வது சட்டபூா்வமாகும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT