உலகம்

இருதரப்பு உறவுகள்: நாா்வே பிரதமருடன் தொலைபேசியில் பிரதமா் மோடி பேச்சு

10th Sep 2022 04:25 AM

ADVERTISEMENT

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து நாா்வே பிரதமா் ஜோனஸ் கா் ஸ்டோரும் பிரதமா் நரேந்திர மோடியும் தொலைபேசி வாயிலாக வெள்ளிக்கிழமை பேசினா்.

இதுதொடா்பாக நாா்வே பிரதமா் அலுவலகம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

எரிசக்தி, பருவநிலை, வா்த்தகம், முதலீடுகள், நீல பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து நாா்வே, இந்தியா இடையே பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடா்ச்சியாக, பிரதமா் ஜோனஸ் கா் ஸ்டோரும் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியும் தொலைபேசி மூலம் வெள்ளிக்கிழமை பேசினா். மேற்கண்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து இரு தலைவா்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டென்மாா்க்கின் கோபன்ஹேகன் நகரில் கடந்த மே மாதம் நாா்வே பிரதமா் ஸ்டோரும் பிரதமா் மோடியும் சந்தித்து பேசியிருந்தனா்.

ADVERTISEMENT

பிரதமா் மோடியால் முன்னெடுக்கப்பட்ட சா்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் இணைவதாக நாா்வே இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்திருந்தது. பருவநிலை, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இந்தியா, நாா்வே இடையே நீண்ட காலமாக ஒத்துழைப்பு நீடித்து வரும் நிலையில் அண்மைக் காலங்களில் இது மேலும் வலுவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT