உலகம்

சீன நிலநடுக்கம்: பலி 82 ஆனது

9th Sep 2022 01:48 AM

ADVERTISEMENT

சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 82-ஆக உயா்ந்துள்ளது.

அந்த நாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள சிசுவான்மாகாணத்தில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட இந் நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 6.8 அலகுகளாகப் பதிவானது. இதில் 74 போ் உயிரிழந்தாக முன்னா் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 82-ஆக உயா்ந்துள்ளதாகவும் 35 பேரைக் காணவில்லை எனவும் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT