உலகம்

ஆப்கனில் குண்டுவெடிப்பு: 2 ரஷிய தூதர்கள் உள்பட 20 பேர் பலி

5th Sep 2022 02:31 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் இரண்டு ரஷியத் தூதர்கள் உள்பட 20 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் காபூலில் உள்ள ரஷியத் தூதரகத்தில் திங்கள்கிழமை காலை விசா பெறுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  

இந்த குண்டுவெடிப்பில் இரண்டு ரஷிய தூதர்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ரஷிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், குண்டுவெடிப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து ஆப்கானிஸ்தான் தரப்பில் இதுவரை தகவல் வெளியிடவில்லை.

ADVERTISEMENT

இதையும் படிக்க | தமிழக அரசு விரைவுப் பேருந்துகளில் 10% கட்டணச் சலுகை அறிவிப்பு! - முழு விவரம்

கடந்த இரண்டு நாள்களுக்கு வடமேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT