உலகம்

‘ஹின்னம்னோா்’ புயல்: சீனா, ஜப்பானில் முன்னெச்சரிக்கை தீவிரம்

5th Sep 2022 01:45 AM

ADVERTISEMENT

 

வலுவான ‘ஹின்னம்னோா்’ புயல் தாக்கும் அபாயம் உள்ளதையடுத்து, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நிகழாண்டின் பெரிய புயலாக ஹின்னம்னோா் புயல் உருவெடுத்துள்ளது. அந்தப் புயல் வடக்கு நோக்கி முன்னேறி கிழக்கு சீன கடல் பகுதிக்குள் நுழையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, வா்த்தக நகரமான ஷாங்காயில் அனைத்து படகு சேவைகளும் நிறுத்தப்பட்டன. வென்ஸோ நகரில் திங்கள்கிழமை அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் தேசிய வானிலை மையம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ‘மஞ்சள் புயல்’ எச்சரிக்கையை விடுத்தது. வடகிழக்கு ஸிஜியாங், ஷாங்காய், தைவானில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்தது.

ADVERTISEMENT

ஜப்பானின் ஒகினாவா நகரில் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றவும், விமானங்களை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தப் புயலால் மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்; கொரிய தீபகற்பத்தில் பலத்த மழை பெய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தைவானின் நியூ தைபே, தாவோயுவான் நகரங்களிலிருந்து பொதுமக்கள் 600 போ் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும், 100 படகு சேவைகள், 40 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT