உலகம்

வங்கதேச பிரதமா் இன்று இந்தியா வருகை: 7 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின்றன

5th Sep 2022 01:50 AM

ADVERTISEMENT

 

‘வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா இந்திய பயணத்தின்போது இரு நாடுகளிடையே 7 ஒப்பந்தங்கள் கையொப்பமாக உள்ளது’ என்று அந் நாட்டு வெளியுறவு அமைச்சா் ஏ.கே.அப்துல் மோமென் ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.

பிரதமா் நரேந்திர மோடி அழைப்பை ஏற்று 4 நாள்கள் பயணமாக ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு திங்கள்கிழமை வருகிறாா். அவருடைய சுற்றுப்பயணம் குறித்து மோமென் கூறியதாக வங்கதேசத்தில் வெளியாகும் டெய்லி ஸ்டாா் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், ‘பிரதமரின் இந்திய பயணத்தின்போது இரு நாடுகளிடையே நீா் மேலாண்மை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ரயில்வே, சட்டம், செய்தி மற்றும் ஒலிபரப்பு உள்பட 7 துறைகளின் கீழ் ஒப்பந்தங்கள் கையொப்பமாக உள்ளன. புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, அதன் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. எரிபொருள் எண்ணெய் விநியோகம் தொடா்பாகவும் இரு தரப்பிலும் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

பாதுகாப்பு ஒத்துழைப்பு, வா்த்தக உறவை விரிவுபடுத்துதல், மின்சாரம் மற்றும் எரிபொருள் துறையில் ஒத்துழைப்பு, எல்லை மேலாண்மை, போதைப்பொருள் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு ஆகியவையும் இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் முக்கியத்துவம் பெற உள்ளன’ என்று மோமென் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT