உலகம்

வித்தியாசமான ருசி! மீன் பிடித்தால் சமைத்துத் தரும் உணவகம்!

31st Oct 2022 07:45 PM

ADVERTISEMENT

 

டோக்கியோ: ஜப்பான் நாட்டில் இயங்கி வரும் உணவகம் ஒன்று வாடிக்கையாளர்களை மீன்பிடிக்க அனுமதிக்கிறது. 

உணவகத்திலுள்ள பிரமாண்ட தொட்டியிலிருந்து வாடிக்கையாளர்கள் பிடித்துத் தரும் மீனையே உண்பதற்காக சமைத்துத் தருகிறது. இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

உங்களுக்கான மீனை நீங்கள்தான் பிடித்துத் தர வேண்டும் என்பது ஆச்சரியமாக உள்ளது அல்லவா?

ADVERTISEMENT

இதுவரை உணவை உண்பதற்காக மட்டுமே பலர் உணவகம் சென்றிருப்பார்கள். சிலர் டெலிவரி நிறுவனங்களின் உதவியுடன் உணவை வீட்டிற்கே வரவழைத்து உண்பார்கள்.

படிக்கலாட்டரியில் ரூ. 248 கோடி வென்றவர் செய்த காரியத்தை பாருங்கள்...

ஆனால், ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலுள்ள உணவகம் ஒன்று வாடிக்கையாளர்களுக்கு உணவு கொடுப்பதற்காக வித்தியாசமான முறையைக் கையாள்கிறது. 

வாடிக்கையாளர்களுக்கு எந்தவித சிரமத்தையும் கொடுக்கக்கூடாது என உணவகங்கள் நினைக்கும்போது, வாடிக்கையாளர்களை மீன் பிடிக்க வைத்து, அவர்கள் கொடுக்கும் மீனையே வாடிக்கையாளர்களுக்கு உணவாக இந்த உணவகம் சமைத்துக் கொடுக்கிறது. 

உணவகத்திற்குள் பிரமாண்ட தொட்டியினுள் ஏராளமான மீன்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் படகு மூலம் சென்று அல்லது தூண்டிலைப் பயன்படுத்தி தரையில் நின்றவாறு மீன் பிடிக்கலாம். 

படிக்கமீண்டும் பிரேஸில் அதிபரானார் லூலா டி சில்வா

வாடிக்கையாளர்கள் பிடித்துத் தரும் மீனை, அவர்கள் விரும்பும்படி உணவக ஊழியர்கள் சமைத்துக்கொடுக்கின்றனர். இதனை குழந்தைகள் பெருமளவு விரும்புவதாலும், மீன்பிடித்து சமைப்பது, சொந்த வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வைத் தருவதாலும், ஏராளமானோர் இந்த உணவகத்திற்கு வருகை தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த உணவகத்தின் சுவாரசியங்கள் குறித்து ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யூடியூபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விடியோ உலக அளவில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT