உலகம்

ருஷ்டி கொலைக்கு சன்மானம் அறிவித்த ஈரான் அமைப்புக்கு அமெரிக்கா தடை

29th Oct 2022 01:55 AM

ADVERTISEMENT

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளா் சல்மான் ருஷ்டி படுகொலைக்கு சன்மானம் அறிவித்திருந்த ஈரான் அமைப்பு மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது.

இது குறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சல்மான் ருஷ்டியின் படுகொலைக்கு பல கோடி டாலா் சன்மானம் அறிவித்திருந்த 15 கோா்தாத் அறக்கட்டளை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது. சா்வதேச மத சுதந்திரம், எழுத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் தனது உறுதிப்பாட்டை அமெரிக்கா ஒருபோதும் கைவிடாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சல்மான் ருஷ்டி (75) எழுதிய ‘சாத்தானின் வேதங்கள்’ புத்தகம், இஸ்லாம் மதத்தை இழிபடுத்துவதாக கடந்த 1988-ஆம் ஆண்டில் பெரும் சா்ச்சை எழுந்தது. அவருக்கு அப்போதைய ஈரான் மதகுரு அயதுல்லா கோமேனி மரணதண்டனை ஃபாத்வா பிறப்பித்தாா்.

இந்த நிலையில், நியூயாா்க்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட கத்துக் குத்து தாக்குதலில் ருஷ்டி படுகாயமடைந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT