உலகம்

ஜி20 மாநாட்டில் ரிஷி சுனக்கை சந்திக்கும் பிரதமா் மோடி

27th Oct 2022 03:51 AM

ADVERTISEMENT

 இந்தோனேசியாவில் நடைபெற உள்ள ஜி20 நாடுகள் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக்கை சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டனின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக் (42) செவ்வாய்க்கிழமை பதவியேற்றாா். அவருக்கு பிரதமா் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தாா்.

இந்த நிலையில், இந்தோனேசியாவின் பாலி தீவில் வரும் நவம்பா் 15-இல் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி அந்நாட்டுக்குச் செல்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் பங்கேற்பதால், இரு தலைவா்களும் அங்கு முதல் முறையாக சந்தித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT