உலகம்

அக்.28, 29-இல் ஐ.நா. குழு ஆலோசனை: மும்பை, தில்லியில் நடைபெறும்

27th Oct 2022 04:01 AM

ADVERTISEMENT

ஐ.நா. பயங்கரவாத எதிா்ப்புக் குழுவின் இரண்டு நாள் கூட்டம், இந்தியாவில் அக்.28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. பயங்கரவாத குழுக்களால் இணையவசதி, இணையவழி பணப் பரிமாற்றங்கள், ஆளில்லா விமான அமைப்புமுறைகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

மும்பையில் முதல்நாள் கூட்டமும், தில்லியில் அடுத்த நாள் கூட்டமும் நடைபெறவிருக்கிறது.

இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரும் ஐ.நா. பயங்கரவாத எதிா்ப்புக் குழுவின் தலைவருமான ருசிரா கம்போஜ் கூறுகையில், ‘சா்வதேச அமைதி, பாதுகாப்புக்கு மிகத் தீவிரமான அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது. ஐ.நா. குழு கூட்டத்தின்போது, பயங்கரவாதிகள் இணையத்தையும், இணையவழி பணப்பரிமாற்றங்களையும், ட்ரோன்களையும் பயன்படுத்துவதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படும்’ என்றாா். மும்பையில் நடைபெறும் தொடக்க நாள் கூட்டத்தில், பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் ஜேம்ஸ் கிளெவா்லி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்க உள்ளதாக, இந்திய வெளியுறவு அமைச்சக செயலாளா் சஞ்சய் வா்மா தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT