உலகம்

அமெரிக்க கார் விபத்தில் 3 இந்திய மாணவர்கள் பலி

27th Oct 2022 03:07 PM

ADVERTISEMENT


விஜயவாடா: அமெரிக்காவின் நியூ ஹெவன் பகுதியில் நடந்த கார் விபத்தில் ஆந்திரம் மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் பலியாகினர்.

அமெரிக்க நேரப்படி செவ்வாய்கிழமை காலை 5 மணிக்கு அமெரிக்காவின் நியூ ஹெவன் பகுதியில் நடந்த சாலை விபத்தில் நிகழ்விடத்திலேயே மூன்று மாணவர்கள் பலியாகினர். இந்த விபத்தில் மற்ற 5 பேர் படுகாயமடைந்தனர்.

மாணவர்கள் வந்த காரும், எதிரே வந்த சிறிய ரக வேனும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேரிட்டது. விபத்து நடந்த போது வேனில் ஏழு பேரும், காரில் மூன்று பேரும் இருந்துள்ளனர்.

இதையும் படிக்க.. ஏன் குரங்குகளைப் போல தாவி வருகிறீர்கள்? செய்தியாளர்களை தரக்குறைவாக பேசிய அண்ணாமலை (விடியோ)

ADVERTISEMENT

பலியானவர்களில் இரண்டு பேர் ஆந்திரத்தையும் ஒருவர் தெலங்கானாவையும் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் அமெரிக்காவின் நியூ ஹெவன் பல்கலைக்கழகத்தில் எம்எஸ் பயில சென்றிருந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

கன்னெக்டிகட் பகுதியில் வசித்து வந்த மாணவர்கள் வெளியே நண்பர்களுடன் சென்றுவிட்டு திரும்பும் போது, பனிமூட்டமாக இருந்ததால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. படுகாயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT