உலகம்

‘உக்ரைனிலிருந்து உடனே வெளியேறுங்கள்’: இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல் 

19th Oct 2022 09:47 PM

ADVERTISEMENT

போர் பதற்றம் காரணமாக சீக்கிரம் வெளியேற உக்ரைன் வாழ் இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. 

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ரஷியா மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆளில்லா போர் விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக உக்ரைன் அரசு ரஷியா மீது குற்றம்சாட்டி வருகிறது.

இதையும் படிக்க | கார்கேவின் வெற்றி காங்கிரஸின் வெற்றி: சசிதரூர்

 

ADVERTISEMENT

இந்நிலையில் உக்ரைனிலுள்ள இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டிலிருந்து வெளியேற இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு புதன்கிழமை வெளியானது. 

மேலும் உக்ரைன் நாட்டிற்கு இந்தியர்கள் யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT