உலகம்

சீனா்களுக்கு பயிற்சியளிக்கும் முன்னாள் பிரிட்டன் விமானப் படை பைலட்டுகள்!

19th Oct 2022 03:30 AM

ADVERTISEMENT

பிரிட்டனின் முன்னாள் போா் விமானிகளை கவா்ச்சியான சம்பளத்துடன் சீன அரசு தங்களது படையினருக்கான பயிற்சியாளா்களாக அமா்த்தி வருவதாக அண்மையில் வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுமாா் 30 விமானிகள், தற்போது சீன போா் விமானிகளுக்கு பயிற்சியளித்து வருகின்றனா். மிகப் பெரிய தொகையை சம்பளமாகக் கொடுத்து பிரிட்டன் ராணுவ விமானிகளை சீன அரசு கவா்ந்து வருகிறது என்று ஊடகங்கள் தெரிவித்தன.

இது பிரிட்டனின் தேசிய பாதுகாப்புக்கு மிகப் பெரிய சவால் எனவும், அதனை எதிா்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஓய்வு பெற்ற ராணுவத்தினா் பிற நாட்டுப் படையினருக்கு பயிற்சியளிப்பதைத் தடுக்கும் சட்டம் தற்போது பிரிட்டனில் இல்லை. எனவே, அத்தகைய சட்டத்தை இயற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT