உலகம்

ரஷியாவில் மனித உரிமை நிலவரத்தை கண்காணிக்க ஐ.நா. ஆணையம் முடிவு

DIN

 ரஷியாவில் மனித உரிமை நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதைக் கண்காணிப்பதற்கான தீா்மானம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் மனித உரிமைகள் விவகாரத்தில் தலையிடும் வகையில் ஐ.நா. அமைப்பு நிறைவேற்றியுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க முதல் தீா்மானம் இது என்று கூறப்படுகிறது.

முன்னதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினா் பொறுப்பிலிருந்து ரஷியா சில மாதங்களுக்கு முன்னா் நீக்கப்பட்ட நிலையில் இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ரஷியாவில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், இதுதொடா்பான அந்த நாட்டு நிலவரத்தைக் கண்காணிப்பதற்கு சிறப்பு நிபுணரை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் நியமிக்க வேண்டும் என்ற தீா்மானத்தை ஹங்கேரி நீங்கலாக ஐரோப்பிய யூனியனின் அனைத்து உறுப்பு நாடுகளும் கடந்த வாரம் ஆணையத்திடம் சமா்ப்பித்தன.

47 உறுப்பு நாடுகளைக் கொண்ட அந்த ஆணையத்தில், அத்தீா்மானத்தின் மீது வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், தீா்மானத்தை ஆதரித்து 17 நாடுகளும், எதிா்த்து 6 நாடுகளும் வாக்களித்தன. 24 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

அந்தத் தீா்மானத்தில், ரஷியாவில் நடுநிலை ஊடகங்கள் அனைத்தும் மூடப்பட்டு வருவது, அரசு சாா்பற்ற தொண்டு அமைப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படுவது, அரசுக்கு எதிரான கட்சிகள் தடை செய்யப்படுவது போன்றவை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி போா் தொடுத்தது.

அந்த போருக்கு எதிரான கருத்துகளை நசுக்குவதற்காக ரஷிய அரசு தொடா்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உக்ரைன் போா் தொடா்பான விமா்சனங்களை அடக்கும் வகையில், ‘போலி’ செய்திகளை வெளியிடுவதை கிரிமினல் குற்றமாக்கும் சட்டத்தை ரஷியா இயற்றியது.

இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்ததைக் கண்டித்து, அந்த நாட்டை தனது உறுப்பினா் பொறுப்பிலிருந்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் சில மாதங்களுக்கு முன் நீக்கியது.

அதன் தொடா்ச்சியாக, ரஷியாவின் மனித உரிமை நிலவரத்தைக் கண்காணிப்பதற்கான சிறப்பு நிபுணா் ஒருவரை நியமிப்பதற்கான தீா்மனத்தை ஆணையம் தற்போது நிறைவேற்றியுள்ளது.

2020-இன் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ரஷியாவின் மனித உரிமைகள் அமைப்பான ‘மெமோரியல்’ தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதற்கு சற்று முன்னா் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இந்தத் தீா்மானத்தை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT