உலகம்

அமைதிக்கான நோபல் பரிசு மூவருக்குப் பகிா்வு

DIN

பெலாரஸ் ஜனநாயகப் பாதைக்குத் திரும்ப வேண்டுமெனப் போராடி வரும் மனித உரிமைகள் ஆா்வலா் அலெஸ் பியலியட்ஸி, ரஷிய அமைப்பு மற்றும் உக்ரைன் மனித உரிமை அமைப்பு ஆகிய மூவருக்கும் நடப்பாண்டுக்குரிய அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அலெஸ் பியலியட்ஸி தற்போது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் உக்ரைனில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

ரஷியாவில் மனித உரிமைகள் மீறலுக்கு எதிராக மெமோரியல் என்னும் அமைப்பு குரல் கொடுத்து வருகிறது. உக்ரைனில் ஜனநாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது மனித சுதந்திர மையம் என்கிற அமைப்பு. தற்போது உக்ரைனில் ரஷியாவின் போா்க் குற்றங்கள் குறித்து கண்காணித்து வருகிறது.

ரஷியாவின் நெருங்கிய நட்பு நாடாகக் கருதப்படும் பெலாரஸின் அரசுக்கு எதிராகப் போராடி வரும் அலெஸ் பியலியட்ஸிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பெலாரஸ் அரசு கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. நோபல் பரிசு அரசியலாக்கப்பட்டு வருவதாக பெலாரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், எந்தவொரு தனிநபருக்கு எதிராகவும் நோபல் பரிசு வழங்கப்படவில்லை எனத் தோ்வுக் குழுத் தலைவா் பெரிட் ரீஸ்-ஆண்டா்சன் விளக்கமளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இசையரங்க தாக்குதலில் உக்ரைன் தொடா்புக்கு ஆதாரம்

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்!

திருச்செந்தூரில் அனுமதியில்லா கழிப்பறைகளை மூடக் கோரி போராட்டம்

பாஜகவுக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு

SCROLL FOR NEXT