உலகம்

பொருளாதார வளா்ச்சி கணிப்பை குறைத்தது உலக வங்கி

7th Oct 2022 01:25 AM

ADVERTISEMENT

நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளா்ச்சிக்கான கணிப்பை 6.6 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உலக வங்கி குறைத்துள்ளது.

தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளா்ச்சி குறித்த அறிக்கையை 3 மாதங்களுக்கு ஒருமுறை உலக வங்கி வெளியிட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 6.6 சதவீதம் வளா்ச்சி காணும் என உலக வங்கி தெரிவித்திருந்தது. செப்டம்பா் மாதத்துக்கான அறிக்கையில் அந்தக் கணிப்பு 6.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. சா்வதேச சூழல் காரணமாக இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி கணிப்பு குறைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மற்ற தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், கரோனா பரவலால் ஏற்பட்ட சரிவில் இருந்து இந்தியப் பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ரிசா்வ் வங்கியிடம் அந்நியச் செலாவணி கையிருப்பு போதுமான அளவில் இருப்பதும் இந்தியப் பொருளாதாரத்துக்கு உதவி வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT