உலகம்

மனிதர்களை மிஞ்சிய ரோபோக்கள்: 'ஃப்ரெஞ்ச் ஃப்ரை' செய்து அசத்தல்!

7th Oct 2022 07:17 PM

ADVERTISEMENT

தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு  நிறுவனம், ஃப்ரெஞ்ச் ஃப்ரை செய்யும் செயல்முறையை தானியங்கி ரோபோக்கள் மூலம் உருவாக்கி உள்ளது. இந்த ரோபோக்கள் மனிதர்களை விட வேகமாகவும், சிறப்பாகவும் செய்கிறது.

பசடேனாவில் உள்ள Miso Robotics Inc சமீபத்தில் Flippy 2 ரோபோவை வெளியிட்டது. இது துரித உணவான ஃப்ரெஞ்ச் ஃப்ரை மற்றும் ஆனியன் ரிங் போன்றவற்றை எளிதாக செய்ய  இந்த ரோபோ உதவுகிறது. ஃப்ரெஞ்ச் ஃப்ரை, ஆனியன் ரிங் மற்றும் மற்றும் பிற உணவு பொருள்களின் செயல் முறைகளை இந்த ரோபோக்கள் மூலம் தானியங்குபடுத்துகின்றன.

கேமராக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்பட்ட ரோபோவானது, உறைந்த ஃப்ரெஞ்ச் ஃப்ரையை குளிர்சாதனப் பெட்டி ஃப்ரீசரில் இருந்து எடுத்து, சூடான எண்ணெயில் பொரித்து, பின்னர் பரிமாறத் தயாராக இருக்குமாறு ஒரு தட்டில் வைக்கிறது.

Miso Robotics இன் கூற்றுப்படி, Flippy 2 ஒரே நேரத்தில் பல்வேறு சமையல் குறிப்புகளின் அடிப்படையில் பல உணவுகளை சமைக்க முடியும். இது உணவக ஊழியர்களின் தேவையை குறைக்கிறது மற்றும் டெலிவெரியை விரைவுபடுத்துகிறது.

ADVERTISEMENT

இந்த கடந்த ஐந்து ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்தது. சமீபத்தில் வணிக பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இதையும் படிக்க: அரசின் தலைவராக 21 ஆண்டுகளை நிறைவு செய்யும் பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள் புகழாரம்

மிசோ தலைமை அதிகாரி பெல் கூறுகையில், இந்த ரோபோக்கள் மனிதர்களின் வேலையை பறிப்பதன் காரணமாக விளம்பரப்படுத்தத் தயக்கம் இருப்பதாக கூறினார். மேலும், மனிதர்கள் ஃப்ரை ஸ்டேஷன் பணிகளை செய்வதை விட  மற்ற பணிகள் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று பெல் கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT