உலகம்

பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும்: அமெரிக்கா அறிவுரை

7th Oct 2022 04:55 PM

ADVERTISEMENT

 

அமெரிக்க குடிமக்கள் பாகிஸ்தான் செல்வதற்கு முன் தங்கள் முடிவை பற்றி யோசிக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான், கைபர் பக்துங்க்வா மாகாணங்களில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் ஆள்கடத்தல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, வெளிநாட்டுப் பயணிகள் துப்பாக்கி முனையில் மிரட்டப்படுவது அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், அமெரிக்க அரசு தன் நாட்டு குடிமக்களுக்கு ‘பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதால் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துங்க்வா மாகாணங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் அப்பயணம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று அறிவுரை வழங்கியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT