உலகம்

‘போர் என்பது..’ சர்ச்சையாகும் எலான் மஸ்க் கருத்து

6th Oct 2022 04:58 PM

ADVERTISEMENT

 

போர் குறித்து எலான் மஸ்க் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் உலகின் நம்.1 பணக்காரராக இருப்பவர். ஸ்பேஸ் எக்ஸ் என்கிற மற்றொரு நிறுவனம் மூலம் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் செயற்கைக் கோள்களையும் ஏவி வருகிறார்.

மேலும், அவர் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

இதன்மூலம், ட்விட்டர் நிறுவனத்திற்கும், எலான் மஸ்க்கிற்கும் நீண்ட நாட்களாக நீடித்து வரும் சட்டப் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று எலான் மஸ்க் தன் டிவிட்டர் பக்கத்தில் ‘போர் என்பது இறுதி உச்நீதிமன்றம்’ எனப் பதிவிட்டுள்ளார்.

தற்போது, இக்கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் - ரஷியா போர் நடைபெற்று வரும் சுழலில் இவரின் கருத்து பலரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT