உலகம்

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

6th Oct 2022 05:57 PM

ADVERTISEMENT

வடகொரியா மேற்கொண்ட ஏவுகணை சோதனை கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. 

வடகொரியா நாடானது அவ்வப்போது மேற்கொள்ளும் ஏவுகணை சோதனைகளுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தென்கொரியாவில் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து அந்நாடு மேற்கொண்டு வரும் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த சில தினங்களாக வடகொரியா தொடர் ஏவுகணை சோதனையை மேற்கொண்டது. 

இதையும் படிக்க | வேலையிழக்கும் 12,000 பேஸ்புக் ஊழியர்கள்??

கடந்த சனிக்கிழமை 2 பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை சோதித்த வடகொரியாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜப்பான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது ரயில் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியது. மேலும் மக்களை பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தியது.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலை 6 மணியளவில் 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக ஜப்பான் மற்றும் தென்கொரியா அறிவித்துள்ளன. 

இதையும் படிக்க | ‘போர் என்பது..’ சர்ச்சையாகும் எலான் மஸ்க் கருத்து

350 கி.மீ தூரம் சென்று தாக்கும் வகையிலான ஏவுகணையும், 800 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணையும் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த 2 வாரங்களில் வடகொரியா மேற்கொண்ட 6ஆவது ஏவுகணை சோதனை இதுவாகும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT