உலகம்

அமைதிக்கான நோபல் பரிசு: இந்தியப் பத்திரிகையாளர்களுக்கு வாய்ப்பு 

6th Oct 2022 06:23 PM

ADVERTISEMENT

அமைதிக்கான நோபல் பரிசு நடப்பாண்டு இந்திய பத்திரிகையாளர்கள் முகமது ஷுபைர் மற்றும் ப்ரதிக் சின்ஹாவிற்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.

இதையும் படிக்க | வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

ஏற்கெனவே மருத்துவம், வேதியியல். இயற்பியல் மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பிற்கான எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த இரு பத்திரிகையாளர்களின் பெயர்கள் இப்பட்டியலில் முன்னணியில் உள்ளதாக பிரபல டைம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

தனியார் இணையப் பத்திரிகையின் செய்தியாளர்களான முகமது ஷுபைர் மற்றும் ப்ரதிக் சின்ஹா ஆகிய இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | வேலையிழக்கும் 12,000 பேஸ்புக் ஊழியர்கள்??

இந்தியாவில் நிலவும் மதரீதியிலான தாக்குதலுக்கு பயன்படும் பொய் செய்திகளை களைவதற்காக இரு பத்திரிகையாளர்களுக்கும் நோபல் வழங்கப்படலாம் என டைம் பத்திரிகை தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் 2017ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் பொய் தகவல்களுக்கு எதிராக உண்மைகளை வெளிக்கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வரும் முகமது ஷுபைர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாகக் கூறி மத்திய அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க | ‘போர் என்பது..’ சர்ச்சையாகும் எலான் மஸ்க் கருத்து

இவர்களைத் தவிர உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐநா அகதிகள் முகமை, உலக சுகாதார நிறுவனம்,காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டக்காரர் கிரெட்டா துன்பெர்க், போப் பிரான்சிஸ் உள்ளிட்டோர் பெயரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT