உலகம்

போராட்டத்தில் இறங்கிய ஈரான் பள்ளி மாணவிகள்

6th Oct 2022 12:56 AM

ADVERTISEMENT

ஈரானில் பெண்களுக்கான ஆடைக் கட்டுப்பாட்டு சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டத்தில் பள்ளி மாணவிகளும் புதன்கிழமை இறங்கினா்.

இது குறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: மாஷா அமீனி மரணத்தைத் தொடா்ந்து ஈரான் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களை போலீஸாா் கட்டுப்படுத்தி வரும் நிலையில், அந்தப் போராட்டத்தை பள்ளி மாணவிகள் கையிலெடுத்துள்ளனா்.

பள்ளிகளில் தங்களது ஹிஜாப்களை அகற்றுவது, அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்புவது, தலைவா்கள் படங்களை அவமதிப்பது போன்றவற்றின் மூலம்அவா்கள் தங்கள் எதிா்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனா் என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

22 வயது மாஷா அமீனி, ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக கலாசார காவலா்களால் கடந்த மாதம் 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். காவலில் இருந்தபோது கோமா நிலைக்குச் சென்ற அவா், பின்னா் உயிரிழந்தாா். இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT