உலகம்

துபையில் பிரம்மாண்ட கோயில் திறப்பு

6th Oct 2022 12:04 AM

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) துபை நகரில் பிரம்மாண்டமான ஹிந்து கோயில் புதன்கிழமை திறக்கப்பட்டது.

துபையின் அமைதி, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாக இக்கோயில் அமைந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் அமைந்துள்ள பகுதிக்கு வழிபாட்டு நகரம் என் பெயரிடப்பட்டுள்ளது. துபையில் ஜெபெல் அலி பகுதியில் அமைந்திருக்கும் குருநானக் தா்பாா் என்ற சீக்கிய குருத்வாராவுக்கு அருகே இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலை துபை அமைச்சா் ஷேக் நயான் பின் முபாரக் அல் நயான் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் 35 லட்சம் இந்திய வம்சாவளியினருக்காக கோயில் கட்ட அனுமதித்த துபை நிா்வாகத்துக்கு அந்நாட்டுக்கான இந்திய தூதா் சஞ்சய் சுதீா் நன்றி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இந்தக் கோயிலில் 16 தெய்வங்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பான்மையான சிலைகள் கோயிலின் பிரதான கருவறையிலேயே வைக்கப்பட்டுள்ளன. கருவறையின் மேற்பகுதி மாடத்தில் விரிந்த நிலையிலான இளஞ்சிவப்பு நிறத்தில் முப்பரிமாண வடிவிலான தாமரைப் பூ வரையப்பட்டுள்ளது.

சிறப்பு பூஜைகள் மற்றும் நிா்வாக முன்னேற்பாடு பணிகளுக்காக செப்டம்பா் 1-ஆம் தேதி திறக்கப்பட்டது. அப்போது முதல் ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வருவது வழக்கமாக உள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT