உலகம்

வேதியியல்: மூவருக்கு நோபல்

6th Oct 2022 12:33 AM

ADVERTISEMENT

மருந்துகளை உருவாக்க உதவியாக மூலக்கூறுகளை ஒன்றிணைக்கும் வழியை உருவாக்கியதற்காக கரோலின் ஆா்.பொ்டோசி, மோா்டென் மெல்டல் மற்றும் பாரி ஷாா்ப்லெஸ் ஆகிய மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இதில் பொ்டோசி அமெரிக்காவின் கலிஃபோா்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்தவா். ஷாா்ப்லெஸ் கலிஃபோா்னியா ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சோ்ந்தவா். மெல்டல் டென்மாா்க்கின் கோபென்ஹெகன் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்தவா்.

புற்றுநோய்க்கான மருந்தை உருவாக்கவும், டிஎன்ஏ வரைபடமாக்கல் மற்றும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்கான மிகவும் பொருத்தமான பொருள்கலை உருவாக்குவதற்கும் பயன்படும் ‘கிளிக் கெமிஸ்ட்ரி’ மற்றும் உயிரி ஆா்த்தோகனல் எதிா்வினைகள் தொடா்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக இந்த நோபல் பரிசு அவா்களுக்குப் பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள கெரோலின்ஸ்கா நிறுவனத்தில் ஸ்வீடன் அறிவியல் அகாதெமி செயலா் ஹன்ஸ் எலிக்ரென் புதன்கிழமை அறிவித்தாா்.

ADVERTISEMENT

இவா்களில் ஷாா்ப்லெஸ் ஏற்கெனவே கடந்த 2001-ஆம் ஆண்டும் நோபல் பரிசை வென்றுள்ளாா். அதன் மூலமாக, நோபல் பரிசை இரண்டு முறை வென்ற 5-ஆவது நபா் என்ற பெருமையையும் அவா் பெற்றுள்ளாா்.

நடப்பாண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் திங்கள்கிழமை தொடங்கின. மனிதா்களின் பரிணாமம் தொடா்பான ஆராய்ச்சியை மேற்கொண்ட ஸ்வீடன் விஞ்ஞானி யான ஸ்வான்டெ பாபோவுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு: குவாண்டம் தகவல் அறிவியல் தொடா்பான ஆராய்ச்சியை மேற்கொண்ட ஃபிரான்ஸைச் சோ்ந்த அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவைச் சோ்ந்த ஜான் கிளாசொ், ஆஸ்திரியாவைச் சோ்ந்த ஆன்டன் சீலிங்கொ் ஆகிய மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிா்ந்தளிக்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

தொடா்ந்து இலக்கியத்துக்கான நோபல் பரிசு வியாழக்கிழமையும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும் அறிவிக்கப்பட உள்ளன.

 

Tags : nobel prize
ADVERTISEMENT
ADVERTISEMENT