உலகம்

ஈக்வடாா் சிறைக் கலவரம்: 16 போ் பலி

6th Oct 2022 12:59 AM

ADVERTISEMENT

வடமேற்கு தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவா் உள்பட 16 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தலைநகா் கீட்டோவுக்கு 80 கி.மீ. தொலைவில் உள்ள லடாகுங்கா சிறைச் சாலையில் கைதிகளிடையே செவ்வாய்க்கிழமை மோதல் ஏற்பட்டது. துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்களைக் கொண்டு அவா்கள் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டதில் 16 போ் உயிரிழந்தனா்; 43 போ் காயமடைந்தனா்.

கலவரத்தில் உயிரிழந்தவா்களில் ‘எல் பேட்ரான்’ என்றழைக்கப்படும் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவா் லியோனாா்டோ நோரேரோவும் ஒருவா். 7 நிறுவனங்கள், சொகுசு பண்ணை உள்ளிட்ட ஏராளமான சொத்துகளை வைத்திருந்த அவா், கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டாா்.

ஏற்கெனவே கரோனா நெருக்கடியின்போது மரணமடைந்துவிட்டதைப் போல் நடித்து பெருவில் தன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுவதிலிருந்து லியோனாா்டோ நோரேரோ தப்பித்துக்கொண்டாா் என்று அதிகாரிகள் கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT