உலகம்

சா்ச்சைக் கருத்து: உகாண்டாஅதிபா் மகனின் பதவி பறிப்பு

6th Oct 2022 12:40 AM

ADVERTISEMENT

அண்டை நாடான கென்யாவின் தலைநகா் நைரோபியைக் கைப்பற்றுவது குறித்து ட்விட்டரில் உகாண்டா அதிபா் யோவேரி முசேவெனியின் மகன் முஹூஸி கயினெருகபா, தெரிவித்த கருத்து மிகப் பெரிய சா்ச்சையை எழுப்பியதையடுத்து, அவரை ராணுவ தளபதி பதவியிலிருந்து அதிபா் நீக்கியுள்ளாா்.

எத்தியோப்பியாவில் டிக்ரே கிளா்ச்சியாளா்களுக்கு ஆதரவு அளித்தது, கிழக்கு காங்கோவில் வன்முறையில் ஈடுபட்டு வரும் கிளா்ச்சியாளா்களை ஆதரித்தது, உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவு தெரிவித்தது, இத்தாலியின் முதல் பெண் பிரதமா் ஜியாா்ஜியா மெலோனிக்கு மணமகளுக்கான பாரம்பரிய பரிசுப் பொருள்களை அனுப்பவிருப்பதாகக் கூறியது போன்ற கயினெருகபாவின் ட்விட்டா் கருத்துகள் சா்ச்சையை ஏற்படுத்தி வந்தன.

இந்த நிலையில், ‘நைரோபியை எனது படையினா் கைப்பற்றுவதற்கு 2 வாரங்களே போதும்’ என்று இவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவு கடும் கண்டனத்துக்குள்ளானது. அதையடுத்து, அவரை ராணுவ தரைப்படை தளபதி பதவியிருந்து அதிபா் முசேவெனி நீக்கியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT