உலகம்

அமைதிக்கான நோபல் பரிசு: எகிறும் எதிர்பார்ப்பு

5th Oct 2022 08:36 PM

ADVERTISEMENT

உக்ரைன் போர் மற்றும் காலநிலை மாற்ற பாதிப்புகளின் மத்தியில் அமைதிக்கான நோபல் பரிசை யார் பெறப்போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.

இதையும் படிக்க | காலநிலை மாற்ற மாநாட்டுக்கு கோகோ கோலா நிதியுதவி: வலுக்கும் கண்டனம்

ADVERTISEMENT

ஏற்கெனவே மருத்துவம், வேதியியல் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பிற்கான எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. காலநிலை மாற்ற பாதிப்புகள் மற்றும் உக்ரைன் போர் ஆகியவை தொடர்பாக நடப்பாண்டு நோபல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுவரை 343 பேரின் பெயர்கள் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பாக பேசிய ஓஸ்லோ அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் ஹென்ரிக் உர்டல், பெலாரஷ் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்வெட்லானா டிகானோவ்ஸ்காயா மற்றும் அலெக்ஸி நவல்னி ஆகியோருக்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க | காலநிலை மாற்ற மாநாட்டுக்கு கோகோ கோலா நிதியுதவி: வலுக்கும் கண்டனம்

அதேபோல் காலநிலை மாற்ற செயல்பாடுகளுக்காக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் மற்றும் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் டேவிட் அட்டன்பரோ ஆகியோருக்கும் நோபல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT