உலகம்

வேதியியலுக்கான நோபல் பரிசு: 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

5th Oct 2022 03:28 PM

ADVERTISEMENT

2022 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.

 

ADVERTISEMENT

அமெரிக்காவின் பேரி ஷார்ப்லஸ், கேரோலின் பெர்டோசி, டென்மார்க்கின் மார்டென் மெல்டாலுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உயிர் இயக்கவியலில் மூலக்கூறுகள் மற்றும் செல்களின் ஆய்வுக்காக 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: துவரங்குறிச்சி ஸ்ரீ பூதநாயகி அம்மன் பொன்னூஞ்சல் விழா

விஞ்சானி பேரி ஷார்ப்லஸ் கடந்த 2001 ஆம் ஆண்டும்  வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு நாளை (வியாழக்கிழமை) அறிவிக்கப்படவுள்ளன. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT