உலகம்

உனக்கு 18 எனக்கு 78! மருமகன் முன்னிலையில் நடந்த காதல் திருமணம்!

5th Oct 2022 04:54 PM

ADVERTISEMENT

 

பிலிப்பைன்ஸ் நாட்டில் 18 வயதுடைய பெண் 78 வயதுடைய முதியவரைத் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. 

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளதாக மணப்பெண் தெரிவித்துள்ளார். 

பிலிப்பைன்ஸ் நாட்டின் காகயான் மாகாணத்தில் வசித்து வருபவர் ரஷித் மங்காகோப். 78 வயதுடைய அவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹலிமா என்ற பெண்ணை இரவு விருந்து நிகழ்ச்சியில் சந்தித்துள்ளார். அவர்கள் நாளடைவில் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது ஹலிமாவுக்கு 18 வயது பூர்த்தியாகியுள்ளது.

ADVERTISEMENT

படிக்கஉலகின் பெரிய பூனையைப் பார்த்ததுண்டா? செல்லப்பிராணியின் உலக சாதனை!

இந்நிலையில், அவர்கள் இருவரும் உறவினர்கள் முன்னிலையில் தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. 

இது குறித்து பேசிய ரஷித் மங்காகோப்பின் மருமகன் பென் மங்காகோப், இது உறவினர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் அல்ல, காதல் திருமணம். இருவரும் காதலித்ததால் தற்போது முறைப்படி திருமணம் செய்துகொண்டதாகக் குறிப்பிட்டார். 

பிலிப்பைன்ஸ் நாட்டின் அரசியல் சட்டப்படி, 21 வயது பூர்த்தியாவதற்கு முன்பே பெற்றோரின் அனுமதி இருந்தால், திருமணம் செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT