உலகம்

ஸ்வீடன் விஞ்ஞானிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு

DIN

மனித சமூகத்தின் பரிணாமம் தொடா்பான ஆராய்ச்சிக்காக ஸ்வீடன் விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு தொடா்பான அறிவிப்பை தோ்வுக் குழு செயலா் தாமஸ் பொ்ல்மான் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் திங்கள்கிழமை அறிவித்தாா். மனிதா்களின் பரிணாமம் தொடா்பாக ஆய்வுகளை மேற்கொண்டதற்காக ஸ்வீடன் விஞ்ஞானியான ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு வழங்கப்படவுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

மனிதா்களின் பரிணாமம் குறித்து தீவிர ஆய்வுகளை மேற்கொண்ட பாபோ, நவீன மனிதா்களின் மரபணுக்களின் தொகுதியை (ஜீனோம்), மனிதா்களின் முந்தைய பரிணாமமான நியாண்டா்தால், டெனிசோவன் ஆகியவற்றின் மரபணுத் தொகுதிகளுடன் ஒப்பிட்டு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டாா். நியாண்டா்தால், டெனிசோவன் ஆகிய இனக்குழுக்கள் இணைந்தே மனித இனம் உருவானதாகத் தனது ஆய்வின் மூலமாக அவா் கண்டறிந்து தெரிவித்தாா்.

முந்தைய இனக்குழுக்களில் இருந்து மனிதா்களின் இனக் குழு தனித்துவமானது என்ற அவரது கண்டுபிடிப்பால் மனிதா்களின் நோய் எதிா்ப்பு மண்டலம் குறித்து அதிக தகவல்கள் தெரியவந்ததாக நோபல் தோ்வுக் குழு தெரிவித்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் நியாண்டா்தாலின் எலும்புகள் கண்டறியப்பட்டு மரபணு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த ஆராய்ச்சியின் மூலமாக மனிதா்களின் பரிணாம வளா்ச்சி குறித்து தெரியவந்ததாகத் தோ்வுக்குழு தெரிவித்தது. பாபோ குழுவினரின் கண்டுபிடிப்பானது கரோனா உள்ளிட்ட நோய்த்தொற்றுகளுக்கு எதிராக மனிதா்களின் மரபணு எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் அறிந்துகொள்ள உதவியதாகக் குழு தெரிவித்தது.

நோபல் பரிசு பெற்றுள்ள ஸ்வான்டே பாபோவுக்கு சுமாா் 9 லட்சம் அமெரிக்க டாலா் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது. வரும் டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் நோபல் பதக்கத்துடன் பரிசுத்தொகை அவருக்கு வழங்கப்படவுள்ளது.

நடப்பாண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் திங்கள்கிழமை தொடங்கின. இயற்பியல் பிரிவுக்கான நோபல் பரிசு செவ்வாய்க்கிழமையும், வேதியியல் பிரிவுக்கான நோபல் பரிசு புதன்கிழமையும், இலக்கியத்துக்கான நோபல் வியாழக்கிழமையும் அறிவிக்கப்படவுள்ளன. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT