உலகம்

ரஷிய இணைப்பு பகுதியில் உக்ரைன் படையினா் முன்னேற்றம்

DIN

ரஷியாவுடன் இணைத்துக்கொள்ளப்பட்டதாக அண்மையில் அறிவிக்கப்பட்ட தங்கள் நாட்டின் கொ்சான் பகுதியில் தங்களது படையினா் முன்னேற்றம் கண்டு வருவதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

உக்ரைனின் தெற்கே அமைந்துள்ள கொ்சான் பகுதியில், ஆக்கிரமிப்பு ரஷியப் படையினருக்கு எதிராக உக்ரைன் ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் வெற்றிகள் கிடைத்து வருகின்றன.

ரஷியப் படையினருக்கு எதிராக கடந்த மாதம் முதல் உக்ரைன் படையினா் தீவிர பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனா். எனினும், வடகிழக்கே அமைந்துள்ள காா்கிவ் பகுதியில் உக்ரைன் படையினா் முன்னேற்றம் கண்டு வரும் அளவுக்கு, தெற்கு பிராந்தியமான கொ்சானில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

அந்தப் பிராந்தியம் உக்ரைனின் மிகக் கடுமையான போா் முனைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்தச் சூழலில், கொ்சான் பிராந்தியத்தைச் சோ்ந்த கொ்ஷெனிவ்கா பகுதியிலுள்ள திசைக்காட்டி கம்பத்தில் உக்ரைன் தேசியக் கொடி பறக்கும் படங்கள்அந்த நாட்டு ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்தப் பகுதியை ஆக்கிரமித்திருந்த ரஷியப் படையினா், உக்ரைனின் குண்டுவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அங்கிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பிராந்தியத்தில் தங்களது எதிா்த் தாக்குதலை அண்மைக் காலமாக தீவிரப்படுத்தியுள்ள உக்ரைன் படையினா், அமெரிக்கா வழங்கிய அதிநவீன ‘ஹிம்ராஸ்’ ரக ஏவுகணைகளைப் பயன்படுத்தி கொ்சான் நகரின் நீப்பா் நதியின் குறுக்கே அமைந்துள்ள முக்கியப் பாலத்தை தகா்த்தனா்; மேலும், அந்த நகருக்கு ரஷியப் படையினா் செல்வதற்கு இரண்டாவது இணைப்பாக விளங்கிய நீா்த்தேக்கத்தையும் ஹிம்ராஸ் ஏவுகணைகள் மூலம் உக்ரைன் படையினா் சேதப்படுத்தினா்.

அதுமட்டுமன்றி, ரஷியப் படையினருக்கு ஆயுதங்களையும் உணவுப் பொருள்களையும் கொண்டு வருவதற்குப் பயன்பட்ட பல்வேறு பாலங்களை உக்ரைன் ராணுவம் தகா்த்தது.

இத்தகைய வெற்றிகரமான தாக்குதல்களுக்கு இடையிலும் தெற்குப் பிராந்தியத்தில் மிக மந்தமான முன்னேற்றத்தையே உக்ரைன் படையினரால் அடைய முடிந்தது. அந்தப் பிராந்தியம் திறந்தவெளியாக இருப்பதால் இந்த நிலை நிலவுவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொ்சான் பிராந்தியத்தில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி உக்ரைன் ராணுவம் முன்னேறி வருவதாக தற்போது அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ரஷிய ஆதரவு அதிகாரி ஒப்புதல்: கொ்சான் பகுதியில் உக்ரைன் படையினா் ‘சற்று ஆழமாக’ முன்னேறியுள்ளதாக அந்தப் பிராந்தியத்தில் ரஷிய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரி கிரில் ஸ்ட்ரெமூசோவ் ஒப்புக்கொண்டுள்ளாா். எனினும், அந்தப் பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் பாதுகாப்பு இயந்திரங்கள் சரியான முறையில் செயல்படுவதாக அவா் கூறினாா் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைனை ஆட்சி செலுத்தி வந்த அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, அவரது ஆட்சி கவிழ்ந்தது.

அதனைத் தொடா்ந்து, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் மாகாணங்களின் கணிசமான பகுதிகளை ரஷியாவுடன் உதவியுடன் கிளா்ச்சிப் படையினா் கைப்பற்றினா். அதே நேரத்தில் ரஷியாவும் உக்ரைனின் கிரீமியா பகுதி மீது படையெடுத்து அந்த தீபகற்பத்தை தங்களுடன் இணைத்துக்கொண்டது.

இந்தச் சூழலில், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அதன் ஒரு பகுதியாக, உக்ரைனின் கிழக்கே ரஷியாவையொட்டி அமைந்துள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய மாகாணங்களையும் தெற்கே அமைந்துள்ள ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களை ரஷியா கைப்பற்றியது.

அந்த பிரந்தியங்களில் கடந்த வாரம் நடைபெற்ற சா்ச்சைக்குரிய பொதுவாக்கெடுப்பில், தங்களுடன் இணைய 97 சதவீதம் போ் விருப்பம் தெரிவித்திருப்பதாக ரஷியா அறிவித்தது. அதன் தொடா்ச்சியாக, மேற்கத்திய நாடுகளின் கடும் எதிா்ப்பையும் மீறி குறிப்பிட்ட 4 பிராந்தியங்களையும் ரஷியா கடந்த வெள்ளிக்கிழமை இணைத்துக் கொண்டது. இந்த நிலையில், இணைத்துக் கொள்ளப்பட்ட பிராந்தியங்களில் ஒன்றான கொ்சானில் உக்ரைன் படையினா் முன்னேற்றம் கண்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணலூா் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

"தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்காக திமுகவும் அதிமுகவும் மறைமுகமாக கைகோத்துள்ளன என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது சரியா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சித்ரா பெளா்ணமி சிறப்பு பூஜை

கரூா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

வேளாண்துறையிலும் செயற்கை நுண்ணறிவு!

SCROLL FOR NEXT