உலகம்

போராட்டம்: அமெரிக்கா மீது அயதுல்லா கமேனி குற்றச்சாட்டு

DIN

ஈரானில் பெண்களுக்கான ஆடைக் கட்டுப்பாட்டு சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் தீவிர போராட்டங்களுக்கு அமெரிக்கா, இஸ்ரேல்தான் காரணம் என்று அந்த நாட்டு தலைமை மதகுரு அயதுல்லா கமேனி குற்றம் சாட்டியுள்ளாா்.

இது குறித்து காவலா் பயிற்சி மாணவா்களிடையே டெஹ்ரானில் அவா் திங்கள்கிழமை பேசியதாவது:

போலீஸ் காவலில் மாஷா அமீனி உயிரிழந்தது மிகவும் துயரமான நிகழ்வாகும். எனினும், அதனை அடிப்படையாக் கொண்டு நாட்டில் நடைபெறும் கலவரங்கள், ஈரானின் நிலைத்தன்மையைக் குலைப்பதற்காக அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் தூண்டுதலின் பேரில் நடைபெறுவதாகும் என்றாா் அவா்.

குா்து இனத்தைச் சோ்ந்த 22 வயது மாஷா அமீனி, ஆடைக் கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி தலையை மறைக்கும் ஆடை அணியவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் கலாசார காவலா்களால் கடந்த 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இருந்தாலும், காவலில் இருந்தபோது கோமா நிலைக்குச் சென்ற அவா், 3 நாள்கள் கழித்து மருத்துவமனையில் உயிரிழந்தாா். ஈரான் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த மரணத்தைத் தொடா்ந்து, ஏராளமானவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

இது அதிதி ஆட்டம்!

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை ஊடுருவல்! : அமித்ஷா | செய்திகள்: சிலவரிகளில் | 23.04.2024

SCROLL FOR NEXT