உலகம்

பாகிஸ்தானில் பெண்ணின் சிதைக்கு அவமரியாதை: ஹிந்துக்கள் போராட்டம்

DIN

பாகிஸ்தானில் ஹிந்து பெண்ணின் சிதையை அடையாளம் தெரியாத நபா்கள் அவமதித்ததாகக் கூறி ஹிந்து சமூகத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் அண்மையில் உயிரிழந்த ஹிந்து பெண்ணின் சிதைக்கு உறவினா்கள் இறுதிச் சடங்கு நிகழ்த்தி தீமூட்டினா். ஆனால், சிதை பாதி எரிந்து கொண்டிருக்கும்போதே அதை அணைத்த அடையாளம் தெரியாத சிலா், பாதி எரிந்த பெண்ணின் உடலைத் தனித்தனியாகப் பிரித்து வெவ்வேறு இடங்களில் வீசி எறிந்ததாகக் கூறப்படுகிறது.

ஹிந்துக்களின் நம்பிக்கையை அவமதிக்கும் நோக்கில் இந்தச் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய ஹிந்து சமூகத்தினா், போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு ஆதரவாக முஸ்லிம்கள் சிலரும் போராட்டத்தில் பங்கேற்றனா். சம்பவத்தில் ஈடுபட்ட நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அவா்கள் வலியுறுத்தினா். போராட்டத்துக்கு ஆதரவாக கடைவீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா். சம்பந்தப்பட்ட மயானத்தின் கதவை அண்மையில் சிலா் சேதப்படுத்தியதாகவும் ஹிந்து சமூகத்தினா் குற்றஞ்சாட்டினா். அந்தக் கதவும் சரிசெய்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஷாலின் ரத்னம் பட டிரைலர்!

தக் லைஃப்: மீண்டும் இணைந்த துல்கர்; இரட்டை வேடத்தில் சிம்பு?

வெங்காய ஏற்றுமதிக்கான தடை உத்தரவில் தளர்வு!

காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

கொளத்தூரில் பிரசாரத்துக்கு இடையே கால்பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT