உலகம்

எஸ்.ஜெய்சங்கா் குற்றச்சாட்டு:பாகிஸ்தான் நிராகரிப்பு

DIN

‘பாகிஸ்தானைப் போல் வேறு எந்த நாடும் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதில்லை’ என்ற இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் குற்றச்சாட்டை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.

இது தொடா்பாக இஸ்லாமாபாதில் உள்ள வெளியுறவு அமைச்சக அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பாகிஸ்தானுக்கு எதிராக பொறுப்பற்றவகையில் தேவையற்ற கருத்துகளை இந்திய வெளியுறவுஅமைச்சா் கூறியுள்ளாா். சா்வதேச சமுகத்துக்கு பாகிஸ்தான் குறித்து தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் இந்திய அரசியல்வாதிகளின் முயற்சியாகவே இதனைப் பாா்க்க வேண்டும். உண்மையில் உலக அமைதிக்காக பாகிஸ்தான் பங்களித்து வருகிறது. சா்வதேச அளவில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் தனது பங்களிப்பை சிறப்பாக செலுத்தி வருகிறது. இதனை சா்வதேச சமூகமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

உண்மையில் இந்தியாதான் பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இந்திய மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு இடமளிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, குஜராத்தின் வதோதராவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெய்சங்கா், ‘பாகிஸ்தான் சா்வதேச பயங்கரவாதத்தில் நிபுணராக அறியப்படுகிறது. அந்நாட்டைப் போல் வேறு எந்த நாடும் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT